/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/f1 (1).jpg)
மதுரை தெற்குமாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீயை அணைக்கும் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/f2_6.jpg)
ஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தீ முழுவதும் அணைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)