Advertisment

மதுரையில் ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து!

madurai textile shop incident

Advertisment

மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் உள்ள சக்சஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்கள், 10 மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றன. குடோன் பழைய கட்டடம் என்பதால் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கையுடன் தீயை அணைத்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட ஜவுளிக்கடையின் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமாகியுள்ளது. மேலும் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

ஏற்கனவே, தீபாவளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

incident textile shop madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe