madurai textile shop incident cm palanisamy fund announced

Advertisment

தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா 15 லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.