Advertisment

40 நாளா நல்லாதானே இருந்தீங்க... வேண்டாம்பா... கெஞ்சிய மகள் தீக்குளிப்பு... 

madurai

'இந்த ஊரடங்கில் கையில் காசு இல்லாட்டியும் நிம்மதியா இருந்தோம். இந்த சந்தோசத்தைக்கெடுத்துடாதப்பா' என்று மன்றாடிய மனைவி, மகளைப் பார்த்து, 'அரசாங்கமே எங்க மேல இரக்கப்பட்டு டாஸ்மாக் கடையைத் திறந்து விட்டிருக்கு, அப்படித்தான் நான் குடிக்கப் போவேன்' என்று பிடிவாதமாக டாஸ்மாக் கடைக்குப் போய் குடித்துவிட்டு வந்ததால், மனைவியும் மகளும் விரக்தியாகி மண்ணெண்ணையைஊற்றி தீக்குளித்தது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை, அலங்காநல்லூர் நல்லையா நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமரன் (வயது 43) கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 38). இந்நிலையில் சிவகுமரன் மது குடித்து விட்டு தகராறு செய்துள்ளார். குடிக்க வேண்டாம் எனக் கூறி மகள் (அர்ச்சனா 18 கல்லூரி மாணவி) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காப்பாற்றச் சென்ற தாய்க்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். தீக்காயம் 80 சதவீதம் ஏற்பட்டள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

madurai tasmac shops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe