Advertisment

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததால் மதுரை மீனாட்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மீனாட்சிபுரம் சி.பி.எம். கட்சி சார்பாக அரசு மதுபானக்கடையை மூடக்கோரி முற்றகை போராட்த்திற்கு அழைப்பு விடுத்தனர். திரளான பெண்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் 20 ஆண்கள் மற்றும் பல பெண்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்த காவல்துறையினர் அவர்களை செல்லூர் ஏ.வி.எம். மஹாலில் வைத்துள்ளனர்.