/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/601_71.jpg)
மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் 10 வயதில் அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். 13 வயதில் பூப்படைந்த நிலையில் ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் தன்னை நம்பி வந்த சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான பாலியல் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி , சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் பாலியலுக்கு உட்படுத்தி வற்புறுத்தியுள்ளனர்.
சிறுமியை ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு வந்த சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு காவல்துறையினர் பலமுறை பின்தொடர்ந்து கைது செய்ய முயன்றபோது தப்பியுள்ளனர்.
இதனையடுத்து மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக அழைத்து சென்று துன்புறுத்துவதாக கூறி வந்த தகவலையடுத்து ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் நேரில் சென்றபோது சிறுமியை மீட்டு சரவணபிரபு என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் தேடிவந்த நிலையில் இன்று காலை போலிசார் கைது செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.11வயதில் இருந்து சிறுமியை ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பேரும் 600க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளதும், பணம் அதிக அளவிற்கு பெற்றுகொண்டு சிறுமியை பண ஆசை காட்டி ஏமாற்றி வந்துள்ளனர்.
சிறுமி என கூறி மாவட்டம் முழுவதிலும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்துள்ளனர்.ஓட்டுனர்கள் முதல் தொழிலாளர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள் தொழிலதிபர்கள் என 600க்கும் மேற்பட்டோரிடம் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.
பாலியல் தொழில் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுனராக சின்னதம்பி தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் உடல்மாற்றங்கள் 70 வயது அளவிற்கு மாறியுள்ளதாக சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்ய வாய்ப்புள்ளது.
மதுரையில் நடைபெற்ற இந்த கொடூர செயலுக்கு பின்புலமாக இருந்தவர்கள் அதற்கு உதவியர்கள் உள்ளிட்டோரை போலிசார் கைது செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)