madurai student incident she is preparing neet exam

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Advertisment

மதுரை மாவட்டம், ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா. இவர் 12- ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்குக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துதோல்வியடைந்த மாணவி, இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

Advertisment

நாளை (13/09/2020) நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா படித்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment