வைகை அணையிலுள்ள நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக அணையின் நீர்பரப்பைத் தெர்மாக்கோல் கொண்டு மூடிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் முயற்சி உலக அளவில் பிரசித்தி பெற்றது. இன்றளவும் அந்த முயற்சி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் வைகையில் கை வைத்திருக்கிறார்.
மதுரை ஹெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ’’மதுரையில்
தொழில் முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரைப்போல்
உலகத்தரம் வாய்ந்த பூங்காக்கள் வைகை நதி பாயும் கரை ஓரம் அமைய இருப்பதால் மதுரை விரைவில் சிட்னி நகரைப்போல விளங்க போகிறது’’என்று கூறியுள்ளார்.