சூரிய கிரகணத்தைத்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மதுரை முத்துப்பட்டி சாலையில் சூரிய கண்ணாடி உள்ளிட்ட சாதனங்கள் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் சூரிய கிரகணத்தைப் பார்க்க அவர்களுக்கு சூரிய வடிகட்டிகண்ணாடி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

Advertisment

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பாண்டியராஜன் ஏற்பாட்டின் பேரில் முத்துப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து சூரிய கிரகணத்தைச் சூரிய வடிகட்டி கண்ணாடி , டெலஸ்கோப் , சல்லடை கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் மூலம் பார்த்து வருகின்றனர்.

மதுரையில் சூரிய கிரகணம் 26.2 சதவீதம் மட்டுமே தெரியும் எனவும் நோய்த் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு மக்கள் கூட்டத்தை கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisment

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணத்தை அவரவர் வீடுகளிலிருந்து பார்த்து மகிழவும் சூரிய வடிகட்டி கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கிரகணத்தின் போது சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூரிய கிரகணத்தின்போது சூரியனிடமிருந்து எந்த விதமான புதிய கதிர்வீச்சுகள் ஏற்படுவது இல்லை எனவும், இதனால் சூரிய கிரகத்திற்கும் கரோனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் அறிவியல் இயக்கத்தினர்தெரிவிக்கின்றனர்.