சுய ஊரடங்கை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில்பிரதமர், மேலும் வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியேவர வேண்டாம் எனவும், அந்த நாள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து வெளியில் வராமல் பிரதமரின் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடித்தனர்.சுய ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பழங்காநத்தம் மற்றும் ரயில்வே நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளே வர யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து நிலையங்களில் மருத்துவக் குழுவினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுத்திகரிப்பு தெளிப்பான் மூலம் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டது.