மதுரையில் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த ரயில்களால் பரபரப்பு... 

மதுரை, திருமங்கலத்திற்கு அருகே இரண்டு ரயில் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

train

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மதுரையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. ஏற்கனவே தாமதமானதால் அந்த ரயில் புறப்பட வேகமாக சிக்னல் கொடுக்கப்பட்டது, இதனால் ரயிலும் கிளம்பியது. அதே நேரத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி வந்த ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது.

அது ஒரு வழிப்பாதை என்பதால் மதுரை வந்து கொண்டிருந்த ரயில் சென்றபின்தான், செங்கோட்டை செல்லும் ரயில் இயக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சிக்னல் கோளாறால் அது முன்னதாகவே இயக்கப்பட்டுவிட்டது. பின் இரண்டு ரயில்களுக்கும் வாக்கி டாக்கியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

madurai tirumangalam Train
இதையும் படியுங்கள்
Subscribe