மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியராக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அவரது கணவர் குருமுனீஸ்வரன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல பள்ளிக்கு வந்து பாடம் எடுத்துள்ளார் ஆசிரியை ரதி தேவி. பள்ளி வகுப்பறையில் ரதி தேவி இருப்பதை தெரிந்து கொண்டு, வகுப்பறைக்கு வந்த கணவர் குரு முனீஸ்வரன் வாக்குவாதம் செய்துள்ளார்.

Advertisment

madurai schools teacher incident

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவர்கள் கண் முன்னே ஆசிரியை ரதிதேவியை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை கைப்பற்றிய போலீசார் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால், பள்ளி மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment