அரசு மருத்துவமனையில் உள்ளே புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை -மதுரையில் பரபரப்பு!

madurai rajaji government hospital

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளே புகுந்து வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரும்பாலையைச் சேர்ந்த கரும்பாலை முருகன் என்பவர் நரம்புத்தளர்ச்சி நோய் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் நான்கு, ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து சிகிச்சை பெற்று வந்த கரும்பாலை முருகனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

மருத்துவமனைக்குள் உள்ளே புகுந்து நோயாளியை வெட்டிக் கொன்ற சம்பத்தால், அங்கு சிகிச்சைக்கு இருந்த மற்ற நோயாளிகள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இது பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கொலை வெறித் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன. கஞ்சா போன்ற போதைப் பொருள் போட்டிகளுக்காகவும், நண்பர்களிடையே தனது கெத்தை காண்பிக்கவும் கூலிப் படைகளாகவும் நாளுக்கு நாள் நடந்து வருகிறது. இது மக்களிடையே பெரும் மரண பீதியை ஏற்படுத்துகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என எல்லோரும் உள்ளபோது, மருத்துவமனைக்குள் உள்ளே புகுந்து வெட்டியசம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

goverment hospital incident madurai Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe