Skip to main content

மதுரை எய்ம்ஸ் நிதியை உயர்த்தியது  ஜப்பானின் 'ஜைக்கா'தான் - ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய அரசு பதில் 

 

madurai aims

 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை 2000 கோடியாக உயர்த்தியது ஜப்பானின் நிதி நிறுவனமான ஜைக்காதான் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்குப் பதில் வந்ததுள்ளது.

 

தென்காசியைச் சேர்ந்த பாண்டிராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு எழுப்பியிருந்த கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் திட்டத்தினை மறுமதிப்பீடு செய்ததால் நிதி 1,264-ல் இருந்து 2,000 கோடியாக உயர்ந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமன நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 85 சதவீத நிதியை ஜப்பானின் ஜைக்கா நிதி நிறுவனம் வழங்கும் என ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

 

இதை படிக்காம போயிடாதீங்க !