அரசு விடுமுறை தினத்திலும் பரீட்சை நடத்தும் மதுரை தனியார் பள்ளி! தெலுங்கு பெற்றோர் கொதிப்பு!

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாளான சனிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் குடும்பத்தோடு கொண்டாடும் இந்த தினத்தில், மதுரையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், மதுரை மீனாம்பள்புரத்தில் உள்ள சிஇஓஏ பள்ளி மட்டும் ஆண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கூறியுள்ளது. இது தெலுங்கு பேசும் பெற்றோரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

NN

அரசு விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று பெற்றோர் வினா எழுப்பியுள்ளனர்.

madurai schools tamilnadugoverment
இதையும் படியுங்கள்
Subscribe