மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் தம்பி பாலன் மதுரை முழுவதும் ரஜினி - அழகிரி இணைந்து இருப்பதைப் போன்று போஸ்டர் ஒட்டி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

'கமல் 60' விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisment

MADURAI POSTER

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, "தமிழகத்தில் அதிசயம், அற்புதம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருக்க கூட மாட்டார், தான் முதல்வராக ஆவேன் என்று, ஆனால் ஒரு அதிசயம் நடந்தது. அவரது ஆட்சி நான்கைந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால், இன்றுவரை ஆட்சி சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும்" என்று கூறி தமிழகத்தின் சென்ஷேசன் ஆனார்.

'பத்தவச்சுட்டியே பரட்ட' என்பதுபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு "தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது" என்று கொளுத்திப் போட்டார். அப்போதிலிருந்து புகைந்து கொண்டிருந்த தீ, கமல் 60 நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுக்க பற்றிக்கொண்டது. பின்னர் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன் வைத்து வந்தனர்.

Advertisment

ரஜினியின் செயலைப் பார்த்து சூடாகிப் போன எடப்பாடி "ரஜினி அரசியல் கட்சித் தலைவரா?... அவர் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவி்ல்லை. அவர் ஒரு நடிகர். அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை" என்று சூசகமாக தெரிவித்தார்.

இப்படி ஒருபுறம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்க, திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த மு.க.அழகிரி," அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். ரஜினி தான் அந்த இடத்தை நிரப்புவார்" என்று கூற அரசியல் ஆட்டம் சூடுபிடித்தது.

இந்நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் தம்பி பாலன் மதுரை முழுவதும் ரஜினி - அழகிரி இணைந்து இருக்கும் புகைப்படம் மற்றும் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டி மதுரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.