Madurai polling stations ready for polling!

2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் வாக்குச்சாவடி மையங்கள் வாக்கு பதிவுக்கு தயாராக உள்ளது.

Advertisment

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் அதிக வாக்களார்களை கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு தொகுதியில் 3லட்சத்து 28 ஆயிரத்தி 990 வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியான சோழவந்தான் தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்தி 106 வாக்காளர்களும் உள்ளனர்.

2,716 வாக்கு பதிவு மையங்களில் 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1,330 பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் 410, திருப்பரங்குன்றம் 458, திருமங்கலம் 402, சோழவந்தான் 305, மேலூர் 346, மதுரை மேற்கு 434, மதுரை தெற்கு 326, மதுரை வடக்கு 347, மதுரை கிழக்கு 479, மதுரை மத்தி 349 என மாவட்டம் முழுவதும் 2,716 வாக்கு பதிவு மையங்களில் 3,856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில்1,330 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

Advertisment

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதலாக 1140 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

5,021 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,856 கட்டுபாட்டு இயந்திரங்கள், 3,856 விவி பேட் இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் வாக்குச்சாவடி மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக 20% வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

1,009 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 774 கன்ட்ரோல் யூனிட்கள், 1,120 வி வி பேட் கருவிகள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 3,400 மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநகர, மாவட்ட காவல்துறையினர் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்தல் போன்ற பணிகளில் 45,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.