மதுரை மாவட்டம்பாலமேடுஅருகே உள்ளசரந்தாங்கிகிராமத்தைச்சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17). தந்தை இறந்து விட்டதால்தனது தாயாருடன் சுரேஷ் வசித்து வந்துள்ளார்.பாலமேட்டில்உள்ள பள்ளி ஒன்றில் சுரேஷ் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவர் படித்து வந்த அதே வகுப்பில்பாலமேடுஅருகே உள்ளசேந்தமங்கலம் என்றகிராமத்தைச்சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17) என்பவரும் படித்து வந்துள்ளார். ஒரே பள்ளியில்ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி இருவரும் காதலித்துவந்ததாகச்சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், இது குறித்து கவிதாவைதனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கவிதாவைதிருமணம் செய்து கொள்ள இருப்பதாகதனதுதாயாரிடம்சுரேஷ்தனதுவிருப்பத்தைத்தெரிவித்துள்ளார். ஆனால்இதற்குத்தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்மனவிரக்தி அடைந்த சுரேஷ்,கவிதாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்துசுரேஷின்தற்கொலை செய்தியைஅறிந்த கவிதா, நேற்று மதியம் வீட்டுக்குஅருகில் உள்ள தோட்டத்தில்அமைந்திருக்கும் மற்றொருவீட்டிற்குச்சென்று கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்தபோலீசார்இரு சம்பவ இடங்களுக்கும் சென்று மாணவன்மற்றும் மாணவியின் உடல்களை மீட்டுபிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துபோலீசார்வழக்குப்பதிவு செய்து மாணவன் மற்றும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம்இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம்மதுரையில் பெரும் சோகத்தையும்அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.