Advertisment

மதுரையில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் கைது

madurai nandhini

Advertisment

மதுரையில் மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் நந்தினி. நந்தினி தொடர்ச்சியாக கடந்த ஐந்து வருடங்களாக மதுவுக்கு எதிராக போராடி இதுவரை 60 முறைக்கு மேல் சிறை சென்றுள்ளார்.

தற்போது கரோனா ஊரடங்கும் போதும் மக்களை பற்றி கவலைபடாமல் டாஸ்மாக் திறப்பது கண்டிக்கதக்கது என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இன்று மதுரை உயர்நீதிமன்ற வாயில் முன் டாஸ்மாக்கை மீண்டும் திறக்கக்கூடாது, அரசு மேல்முறையீடு செய்தது தவறு என்று கோஷமிட போவதாக அறிவித்திருந்த நிலையில், நந்தினி வீட்டுக்கு போலீசார் வந்து அவரை கைதுசெய்ய முற்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை ஏழு மணி அளவில் அவர் வீட்டு வாசல் முன் நந்தினியின் தந்தை ஆனந்தன் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததும், அவரையும்போலீசார் கைது செய்தனர். இதுஅங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

madurai nandhini tasmac shops
இதையும் படியுங்கள்
Subscribe