/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk alagiri.jpg)
மதுரையில் வரும் நவம்பர் 20- ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தனிக்கட்சி தொடக்கம், யாருக்கு ஆதரவு போன்றவை குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று ஆதரவை திரட்டுவார் என்று தகவல் கூறுகின்றன.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)