/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MADURAI 456.jpg)
மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக 8 ஆண்டுகளாகப் பதவி வகித்த நடராஜனைபணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
2014- ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிய நடராஜன் சேலம் மண்டல அறநிலைய இணை ஆணையரானார். திருவேற்காட்டில் பணியாற்றிய செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் மூன்று வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us