Published on 23/05/2020 | Edited on 23/05/2020

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக 8 ஆண்டுகளாகப் பதவி வகித்த நடராஜனை பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
2014- ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிய நடராஜன் சேலம் மண்டல அறநிலைய இணை ஆணையரானார். திருவேற்காட்டில் பணியாற்றிய செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் மூன்று வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.