உலக அதிசியங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை முன்னிறுத்தி வந்த நிலையில் திருப்பதிக்கு அடுத்து தினமும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

Advertisment

இன்று (நவம்பர் 8) முதல் லட்டு கொடுக்க தயாராகி வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ காணொலி மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதை தொடங்கி வைத்தார். தினமும் 20,000 லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் முந்திரி பாதாம் கிஸ்மிஸ் என சத்து மிகுந்த உணவு பொட்களுடன் நெய் சேர்த்து உயரந்த தரத்தில் மிஷின் மூலம் தினமும் 15 பேர் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் என்று மீனாட்சி அம்மன் கோயில் வட்டாரங்களில் தெரிவித்தனர். இது மதுரை மக்களுக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக இருக்கும் என்று மக்கள் பெருமிதப்பட்டனர்.

Advertisment