மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 54 போலீசார் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் கரோனா பரிசோதனை நடைபெற்றது. கோவில் உள்ளே முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது. யாரேனும் வெளிநாடு சென்று வந்துள்ளனரா என்பது குறித்தான பயண விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisment

meenakshi amman kovil

இந்த நிலையில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக இரா.சாமிநாதபட்டர் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார் (72 வயது) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நீரிழிவு மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 nakkheeran app

Advertisment

அங்கு சிகிச்சையில் இருக்கும்போது அவருக்கு காய்ச்சல் வந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவிக்குப் பின்னர் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முதலிலும், உள்ளது என்று இரண்டாவதாகவும் தகவல் தெரிவித்தனர்.

meenakshi amman kovil

ரேபிட் கிட் பரிசோதனை முடிவுகளில் குழப்பம் இருக்கிறது என்பதால்,அதன்படி முடிவுகளை அறிவிப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது.தற்போது எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகள் தெரிய இன்னும் ஒருநாள் ஆகும் என்று அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இதற்கிடையில் அந்த குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அவரது வீட்டில் வேலை செய்தவர், அக்கம் பக்கத்தவர்களையும், அவரது மகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிவதால் கோவில் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய மாநகராட்சி/மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது பரிசோதனைகள் நடந்து வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுவரையில் காவல்துறையினருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது. இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை. அனைவரும் டெஸ்ட் எடுக்க தயாராக சமூக இடைவெளியுடன் காத்திருக்கிறோம்.இந்நிலையில் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு தொற்று உறுதி" என்று சிலர் பொய்செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர்கள் குறிப்பிடும் பட்டர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை.ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று வந்ததால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த பட்டர்கள் சிலருக்கும் 24-30 நாட்கள் அரசு கண்காணிப்பு முடிந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்ற விவரத்தையும் அறியத் தருகிறோம் என்று கூறியுள்ளார்.