Advertisment

பணிச்சுமை காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை...

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை

madurai

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பின்புறம் உள்ள மதிச்சியம் முனிஸ்பல் காலணி பகுதியில், மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் தனியாக அறையெடுத்து வசித்து வந்த மதுரை அரசு இராஜாஜி மருத்துவ கல்லூரியில் மயக்கவியல்துறை 2ஆம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் உஜயராஜ். இவர் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர். இன்று காலை தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார் உதயராஜ். மதிச்சியம் காவல்துறை உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகிறது.

Advertisment

மாணவர் பணிச்சுமையின் காரணமாக விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக கடைசியாக எழுதிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

மாணவரின் தந்தை உத்திராபதி நம்மிடம் பேகையில், “என் மகன் கஷ்டபட்டு டாக்டர் படிக்க இங்க வந்தான். கடைசில என் மகனை டார்ச்சர் பண்ணி கொண்ணுட்டாய்ங்க. அவனின் செல்போனையும், கடைசியாக எழுதிய கடிதத்தையும் மறைத்து வைத்துள்ளார்கள். இரண்டுபக்க கடிதம் இருப்பதாக சொல்கிறார்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று அழுதுகொண்டே டீன் வனிதாவை பார்த்து இதுகுறித்து முறையிட செல்கிறார்..

madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe