Advertisment

மேம்பாலத்திற்கான இரும்பு சாரம் சரிந்து விபத்து; 4 பேர் படுகாயம்!

Madurai  Koripalayam Overpass collapse incident 

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இணைப்பு பாலத்துக்காக சாரம் அமைக்கப்பட்டு வந்தது. இதில் பாரம் தாங்காமல் திடீரென இரும்பு சாரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி அங்கு பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த 4 பேர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேம்பால பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
police incident Bridge madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe