Advertisment

கீழடியில் "தமிழ் அரசர்கள் போருக்குப் பயன்படுத்திய "யாழி" மிருகத்தின் எலும்புக் கூடு?

Advertisment

கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் அரசர்கள் போருக்குப் பயன்படுத்திய ''யாழி" மிருகத்தின் எலும்புக் கூடு? கிடைத்திருக்கிறது.

மதுரை கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் விலங்கினத்தின் எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. தமிழக தொல்லியல் துறையில்2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆய்வு நடந்து வருகிறது. தற்போது ஆறாம் கட்ட ஆய்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக மணலூர் கொந்தகை ஆகிய இடங்களிலும் ஆய்வுப் பணி நடந்து வருகிறது.

கீழடியைப் பொறுத்தவரை தொழிற்கூடங்கள் நடந்த பகுதியாகவும், மணலூர் தமிழர்களின் வாழ்வியல் பகுதியாகவும், கொந்தகை காட்டுப் பகுதியாகவும் சான்றுகள் இதுவரை கிடைக்கிறது. பாண்டிய மன்னனின் தலை நகராக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2,600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரீகம் கீழடி இதுவரை நடந்த ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது வித்தியாசமான விலங்கின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இது ''யாழி'' யாக இருக்கலாம். பண்டைய பாண்டிய மன்னர்களின் அரண்மனையிலும் கோயில்களிலும் "யாழி" போன்ற விலங்கின் சிலைகளை நாம் காணலாம். இது குதிரை உடம்பும் சிங்கத் தலையும் உள்ளது போன்றும் யானை முகமும் சிங்க உடலும் உள்ளது போன்றும் காணப்படுகிறது. பழமையான நாகரிகங்களில் சீனாவில் உள்ளது போன்ற அவர்களின் முக்கிய விலங்கினமாக ஒரு அடையாளமாக டிராகன் எப்படி உள்ளதோ அதே போன்று இந்த ''யாழி"யை பண்டையத் தமிழர்களின் சிற்பங்களிலும் அனைத்து அரண்மனை போன்ற முக்கிய இடங்களில் வடிவமைத்துள்ளனர்.தற்போது யாழியைப் போன்ற வடிவ எலும்புக் கூடு கிடைத்தது ஆச்சரியத்தையும் வியப்பையும்ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கேட்டபோது, ஆய்வின் முடிவில் எந்த விலங்கின் எலும்புக்கூடு என்று தெரியவரும் என்று தெரிவித்தனர். தற்போது வரை சுடுமண் முத்திரைகள் பானைகள், நான்கு அடுக்கு உள்ள சுவர்கட்டிடங்கள் காணப்படுகின்றன. இந்த எலும்புக்கூடு வளர்ப்பு பிராணிகளான நாய், குதிரை, ஆடு, மாடு போன்றவை போல் இல்லாமல் புதுவிதமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

keeladi madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe