Advertisment

மதுரை ஜல்லிக்கட்டு; 12 ஆயிரம் காளைகளும், 4 ஆயிரம் மாடுபிடி வீரர்களும் முன்பதிவு

 Madurai Jallikattu; 12,000 bulls and 4,000 cowherds are reserved

Advertisment

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முகூர்த்தக் கால் கடந்த 08.01.2024 ஆம் தேதி நடப்பட்டது.

தொடர்ந்து ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் madurai.nic.in என்ற இணையதளத்தில் காலையில் மற்றும் மாடு கொடி வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 12,176 காளைகளும் 4,514 வீரர்களும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுரையில் மட்டும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில்பங்கேற்க மொத்தமாக12,176 காளைகள், 4,514 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூரில் 6,099, பாலமேட்டில் 3,677, அவனியாபுரத்தில் 2,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளதாக தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு கலையரங்கம்திறக்கப்பட்டபின் ஐந்து நாட்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

madurai jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe