madurai

மதுரையில் குடும்ப பிரச்சனை காரணமாக மாமியாரையும், மனைவியையும் கணவன் வெட்டியதில் மாமியார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisment

மதுரை மாவட்டம் ஒப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி-ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மனைவி ஜெயாவின் 15 சவரன் நகையை கணவன் முனியாண்டி மாமியார் காளியம்மாள் பெயரில் அடகு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட ஜெயா நெடுமதுரையில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

Advertisment

அப்பொழுது மருமகன் முனியாண்டியிடம் நகையை மீட்க பணம் தருமாறு கேட்டு இருக்கிறார் காளியம்மாள். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால் காளியம்மாள் காவல் நிலையத்தில் முனியாண்டி மீது புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி நேற்று முன்தினம் வீட்டிற்குச் சென்று மாமியார் காளியம்மாளைகொடூரமாக அரிவாளால் வெட்டிக்கொலைசெய்துள்ளார். தடுக்கவந்த மனைவி ஜெயாவையும் முனியாண்டி வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முனியாண்டியை தேடி வருகின்றனர்.