Advertisment

தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் மேலும் ஒருவர் கைது

Madurai incident... One arrested under National Security Act

கடந்த மாதம் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தன. தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக பல்வேறு நபர்களை கைது செய்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாஹிர் என்பவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

police madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe