madurai hundred days programme working woman incident

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஃபிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 31). இத்தம்பத்தினருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மையிட்டான்பட்டி கிராமத்தில் இவர் 100 நாள் வேலைத் திட்டபணித்தள பொறுப்பாளராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகபணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று மையிட்டான்பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் அரசுப்பேருந்தில், நாகலட்சுமி தனது 2 பெண் குழந்தைகளுடன் ஏறி உள்ளார். பின்னர் பேருந்து சிவரக்கோட்டை அருகே அனுமன் கோவில் பகுதியில் சென்றபோதுஅருகில் இருந்தவர்களிடம் தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சட்டென்று முன்பக்கம் இறங்கும் பகுதிக்கு வந்த நாகலட்சுமி திடீரென ஓடும் பேருந்தில்இருந்துகுதித்து விட்டார். இதனைக் கண்ட மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து ஓட்டுநரும் பேருந்தை நிறுத்திவிட்டார். பேருந்தில் இருந்த பயணிகள் நாகலட்சுமியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

நாகலட்சுமியை 100 நாள் வேலைத்திட்டப் பணிக்கு வரக்கூடாது என மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார்மற்றும் பாலமுருகன், ஊராட்சிசெயலாளர் முத்து ஆகிய மூவரும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நாகலட்சுமி ஏற்கனவே கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. போலீசாரிடம் புகார் தெரிவித்தது தொடர்பாக மூவரும்நாகலெட்சுமியை அவதூறாகப் பேசி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாகத்தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இவர் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.