Advertisment

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.

Advertisment

rs

உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், ‘’லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும். மேலும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கும் பழக்கத்தை முழுமையாக ஒழிக்க இதுவே வழி. கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்ச பழக்கம் ஒழியும். அப்போதுதான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும்’’ என்று தெரிவித்தனர்.

Advertisment

மின்வாரிய தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை பரணிபாரதி தொடந்த வழக்கில் மேற்கண்டவாறு கருத்தை தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன முறையில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

highcourt madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe