Advertisment

'கக்கூஸ்' திவ்யபாரதி கைது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

divya

Advertisment

ஆவணபட இயக்குநர் திவ்யபாரதியை ஜூலை 16 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை தொடரும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஆவணபட இயக்குனர் திவ்யபாரதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய 'ஒருத்தரும் வரேல'என்ற ஆவணபடம் எடுத்துவருகிறேன். இதன் டீசர் வெளியிட்டுள்ளேன்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்நிலையில் எனது வீட்டிற்கு போலிசார் வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் சம்பந்தமாக ஆவணங்களை கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். என்னை தேச துரோக வழக்கில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே என்னை போலிசார் கைது செய்ய இடைகால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, " அரசு தரப்பில் திவ்யபாரதி மீது நீலகிரி,கூடலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது என கூறப்பட்டது. இதனையடுத்து திவ்யபாரதியை ஜூலை 16 ஆம் தேதி வரை கைது செய்ய இடைகால தடை தொடரும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நீலகிரி மற்றும் கூடலூர் காவல்நிலையங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகார வரம்பிற்குள் வராது,எனவே மனுதாரர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kanyakumari orutharumvarela kakkoos divya barathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe