
நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனிக்குழு அமைக்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில், நீர்நிலைகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வருங்கால தலைமுறையினர் அல்லல்படுவர்எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட எத்தனை நீர் நிலைகள் இருந்தன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனிக்குழு அல்லது ஒரு அமைப்பை உருவாக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பி அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)