Advertisment

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!  

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

madurai highcourt

நாமக்கல் குமாரபாளையத்தில் செல்ல அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார், என மாலை 06.30 மணி அளவில் எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இறந்தவர் மணிவாசகம்தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல்துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காண தகுதியானவர். கேரள காவல்துறையினரால் மணிவாசகம் சித்திரவை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Advertisment

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," கேரள நீதிமன்றம் மணிவாசகத்தின் உடலை வெள்ளிக்கிழமை வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

madurai hi court Maoist
இதையும் படியுங்கள்
Subscribe