Advertisment

'ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு'- உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ. தகவல்!

madurai high court sathankulam incident cbi

Advertisment

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன்முன்பு இன்று (08/09/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு, பதிவு செய்யப்பட்டிருக்காது. சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரி என்கிற வகையில் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. விசாரணை முடிவடையாத நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தற்போது ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து, ஸ்ரீதர் ஜாமீன்மனு மீதான விசாரணையை (11/09/2020) வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

CBI madurai high court sathankulam Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe