Advertisment

ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? - உயர் நீதிமன்றக் கிளை கேள்வி!

oxygen production madurai highcourt bench judges

Advertisment

ஆக்சிஜன் உற்பத்திதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (06/05/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் இறந்ததைப் பார்க்கும்போது ஆக்சிஜன் தேவைப் பற்றி கேள்வி எழுகிறது. தமிழகத்தில் செயல்படாத ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை உள்ளன? அவற்றில் தற்போது உற்பத்தி செய்ய முடியுமா?

செயல்படாமல் உள்ளவற்றில் எத்தனை மையங்களை உடனே திறந்து ஆக்சிஜனை தயாரிக்க முடியும்? செங்கல்பட்டில் உள்ள மையத்தில் தடுப்பூசிதயாரிப்பதற்கானசாத்தியக் கூறுகள் இருந்தும் அதனை செயல்படுத்தாதது ஏன்?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

coronavirus madurai high court oxygen
இதையும் படியுங்கள்
Subscribe