/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai 44433_0.jpg)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வேலாயுத ஊருணியில் நுண்ணிய உர மையம் செயல்பட தடைக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று (19/07/2021) நீதிபதிகள் விசாரித்த போது, "நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக் கொண்டு இருக்காது. நீர் நிலைகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் காவலர்களாக மாநிலங்கள் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் நுண்ணிய உர மையத்தினால் நீர்நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Follow Us