"தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்": நீதிபதி கிருபாகரன் பேச்சு!

madurai high court bench judges speech at madurai

மதுரையில் தொல்லியல்துறை அகழாய்வு பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி பார்வையிட்டனர்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், "தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்; வெளிநாடுகள் மோகம்அதிகமாகிவிட்டது. தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் பண்பாடு. பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக் கூடாது; எந்த கலாச்சாரத்திற்கும் மொழிதான் அடையாளம். பழமையும், பண்பும் மறந்து போய்விட்டதற்கு முதியோர், அனாதை இல்லங்கள் அதிகரிப்பே ஆதாரம். பழமையான மொழியை ஏற்கும் மனோபாவம் தேவை; தங்கள் மொழிதான் பெரியது, சிறியது என்ற எண்ணம் கூடாது. தமிழும், ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தைத்தான் பேசுகிறது." என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி புகழேந்தி, "7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கிருபாகரனின் கருத்தால் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு உதவ முன் வந்துள்ளன. ஏழை மாணவர்களுக்கு அதிக மருத்துவ இடம் கிடைக்க 7.5% உள்ஒதுக்கீடு வழக்கை கையாண்ட விதமே காரணம்." என்றார்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து பயிலமுடியாதவர்களுக்கு ஏன் கட்சிகள் உதவக்கூடாது என நீதிபதி கிருபாகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

judges madurai high court Speech
இதையும் படியுங்கள்
Subscribe