/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Madurai-high-court_0.jpg)
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடமும் 18 தொகுதிகளில் கடந்த முறை செய்யப்பட்ட தேர்தல் செலவு பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், அந்த வசூல் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், 18 பேரிடம் பணத்தை வசூலிக்கும் வரை 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்த தடை கோரியும் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் , தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தகுநீக்கம் எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் இவ்வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)