Advertisment

மதுரை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை! -மகிழ்ச்சிப் பெருக்கில் மக்கள்!

மதுரையில் விமான நிலையம், பெருங்குடி, வலையங்குளம், சின்ன உடைப்பு உள்ளிட்ட மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

Advertisment

madurai heavy rain peoples happy

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நிலையூர், விமான நிலையம், பெருங்குடி, வளையங்குளம், சின்ன உடைப்பு, நெடுங்குளம், நல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்றிரவு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், எங்கு பார்த்தாலும் தெருக்களிலும் சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.பொது மக்களையும் அப்பகுதி விவசாயிகளையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது இம்மழை!

heavy rain madurai PEOPLES HAPPY
இதையும் படியுங்கள்
Subscribe