Madurai followed by Chennai

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல்முதல் 30ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

முழுமுடக்க காலத்தில் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு அனுமதியில்லை,அவசர மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி. அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள் செயல்படும்.மதுரை மாநகராட்சி பகுதிகள்,பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு ஊரக பகுதிகளிலும் முழு பொது முடக்கம் அமலாகிறது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய,மாநில அரசு அலுவலங்கள் 33 சதவீத பணியாளர்களுடன்இயங்க வேண்டும்.

வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்விததளர்வும்இல்லாமல் முழுமுடக்கம்மதுரையில் அமலில் இருக்கும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். கரோனாகட்டுப்பாடு பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது, நேரடியாக வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யலாம்.காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். தள்ளுவண்டி கடைகளில் காய்கறிகள் விற்பனைக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.