madurai DMK And alliance party support farmers

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக மாநகர் பகுதிகள், ஒத்தக்கடை, சோழவந்தான், ஊமச்சிகுளம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Advertisment

மதுரை மாநகர் பகுதிகளில் கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி தலைமைவகித்தனர். தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்தைவேலு, பொன் சேது சின்னம்மாள், பழனிசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன், கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.எம். விஜயராஜன், பார்வர்ட் பிளாக் கதிரவன், விடுதலை சிறுத்தைகள்.மாவட்டச் செயலாளர் கதிரவன் பாண்டியம்மாள் உட்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisment