dmk madurai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்பும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

Advertisment

அவருடைய அறிக்கையை தொடர்ந்து திமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகள் நிவாரணப் பொருட்களை சேகரித்து டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றன.

Advertisment

அந்த வரிசையில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.பி.ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் ஏ.பி.ரகுபதி, தனப்பாண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.