The couple who committed suicide by hanging themselves after losing a large amount in the stock market!

Advertisment

பங்குச்சந்தையில் பணத்தை பெருமளவு இழந்ததால், மதுரையில் கணவன்- மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டனர்.

மதுரை மாவட்டம், பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் பங்குச்சந்தையின் ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்தார். பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்த நிலையில், திடீரென சரிவு ஏற்பட்டதால், அவர் அதிகளவில் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகராஜனும், அவரது மனைவியும் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நாகராஜன் மற்றும் லாவண்யா தம்பதியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக, மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.