Advertisment

"992 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை" - மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேட்டி!

madurai district collector pressmeet

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், "மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடைபெறாத வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடியோ, பறக்கும் படை என சட்டமன்றத் தொகுதிக்குத் தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.

முறையான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படாது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் '1950' மற்றும் சி -விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மேலும், வாகனங்கள் அனுமதி பெற 'சுரிதா' என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம். காவல்துறை மூலம் 21 இடங்களைபொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் 3,856 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 992 பதற்றமானவை. 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பம் இருந்தால் தபால் ஓட்டு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையம் மூலம் இதற்கான படிவம் பெற முடியும்" என்றார்.

pressmeet madurai District Collector tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe