Madurai Dhoppur North Indian Life Incident

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிக்காக ஏராளமான வட மாநிலத்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் நேற்றிரவு கட்டுமான பணி முடிந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான சுபாஷ், சனி ஆகிய இருவரும் தங்களது இரவு உணவுக்காக காய்கறி, பழங்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பியுள்ளனர்.

Advertisment

அப்போது இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வடமாநிலத்தொழிலாளர்கள் தங்களின் செல்போன் மற்றும் பணத்தை தர மறுத்ததால் மர்ம நபர்கள் 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டனர்.

Advertisment

வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் சனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கத்திக் குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளியானசுபாஷ், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் 3 பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.