முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.மதுரை மாவட்டம்- திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி கட்டினார் மு.க.அழகிரி. சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், அக்கல்லூரியைக் கட்டும்போது விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார்.

Advertisment

madurai court m k azhagiri land  case

அதனைத் தொடர்ந்து, மதுரை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மு.க.அழகிரி, சம்பத், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய ஐவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று (23/10/2019) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மு.க.அழகிரி, சம்பத், சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய நால்வர் ஆஜரானார்கள்.

இன்னொரு வழக்கு.. மு.க.அழகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, தனது வேட்பு மனுவில் சொத்துக்களைக் கணக்கில் காட்டாத வழக்கு. அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த இவ்வழக்கிலும் இன்று ஆஜரானார் அழகிரி. இவ்விரண்டு வழக்குகளையும் விசாரித்த மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ன் நீதிபதி ஸ்ரீதேவி வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.