Advertisment

ஊரடங்கு எதிரொலி;பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடி.. ட்ரெண்டாகும் வீடியோ!!

Madurai couple married on a flying plane .. Trending video !!

ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர்.

Advertisment

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்பிரதாயப்படி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார். இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர். விமான பயணம் என்பதால் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் பயணத்தின்போது திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

flight marriage corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe