Advertisment

தாயைக் கொன்ற கல்லூரி மாணவன்..!

Madurai college student arrested in his mothers case

மதுரை மாவட்டம், செல்லூர் அருகே அமைந்துள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வஞ்சிமலர் (வயது 49). இவர்களுக்கு ஓம்சக்தி (19) என்ற மகன் உள்ளார்.

Advertisment

இவர் மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. (தகவல் தொழில்நுட்பம்) படித்து வருகிறார்.

Advertisment

ஓம்சக்திக்கு 3 வயது இருக்கும்போது கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் வஞ்சிமலருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகியுள்ளது. அதன்பின் அவர் தனி ஆளாகக் கூலி வேலைக்குச் சென்று மகனை வளர்த்து, கல்லூரியில் படிக்க வைத்துவந்தார்.

இந்த நிலையில், வஞ்சிமலருக்கு சமையல்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ஓம்சக்தி கண்டித்துள்ளார். ஆனாலும் வஞ்சிமலர் கேட்கவில்லை.

இந்த நிலையில், தாய்க்கும் மகனுக்கும் இடையே நேற்றிரவு இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தாயும் மகனும் வீட்டில் படுத்து தூங்கினர். அதன்பின் நள்ளிரவில் விழித்த ஓம்சக்தி, தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் மீது அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கிய வஞ்சிமலர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் வஞ்சிமலர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓம்சக்தியைக் கைது செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe